அரவிந்த் சாமி நடித்துள்ள 'கள்ளபார்ட்' படத்தின் டீசர் வெளியீடு..!


அரவிந்த் சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் டீசர் வெளியீடு..!
x
தினத்தந்தி 5 Jun 2022 4:45 PM GMT (Updated: 5 Jun 2022 4:52 PM GMT)

நடிகர் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள 'கள்ளபார்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கள்ளபார்ட்'. இந்த படத்தில் ரெஜினா கேசன்ட்ரா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாரதி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட படமாக கள்ளபார்ட் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது கள்ளபார்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.



Next Story