அதர்வா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்


அதர்வா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்
x

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குருதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அதர்வா 'களவாணி' , 'வாகை சூடவா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு 'பட்டத்து அரசன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



Next Story