கவனம் ஈர்க்கும் 'பூமர் அங்கிள்' டிரைலர்


கவனம் ஈர்க்கும் பூமர் அங்கிள் டிரைலர்
x

'பூமர் அங்கிள்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஓவியா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டது. பின்னர் 'பூமர் அங்கிள்' என்று மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பூமர் அங்கிள்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story