இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் - அவதார்: தி வே ஆப் வாட்டர்- உலக அளவில் ரூ.16 ஆயிரம் கோடி வசூல்


இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் - அவதார்: தி வே ஆப் வாட்டர்-  உலக அளவில் ரூ.16 ஆயிரம் கோடி வசூல்
x

அவதார்: தி வே ஆப் வாட்டர் இப்போது இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமாக மாறியுள்ளது

சென்னை

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆப் வாட்டர் இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்த ஹாலிவுட் படமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது.தற்போது இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை கேமரூனின் படம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமை விட இப்படம் அதிகம் வசூலித்துள்ளது. அவதார் 2 இதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.368.20 கோடி வியாபாரம் செய்துள்ளது. அதே நேரத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்தியாவில் 367 கோடி வியாபாரம் செய்தது.

1900 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள அவதார் படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அவதாரின் முதல் பாகம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படம் இன்னும் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், வர்த்தக ஆய்வாளர் தரண் அர்தாஷ் அவதார் 2 படத்தின் வசூல் குறித்து டுவீட் செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவதார்௨ 2.024 பில்லியன் டாலரை எட்டியது. (இந்திய மதிப்பில் ரூ.1,62,69,) இதில் சுமார் 1.4 பில்லியன் டாலர் அமெரிக்க மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள சர்வதேச சந்தைகளில் இருந்து வருகிறது.

இதை தொடர்ந்து அவதார் 2' எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த ஆறாவது திரைப்படமாக அவதார்: தி வே ஆப் வாட்டர் மாறியுள்ளது



1 More update

Next Story