ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும்! அயோத்தி ராமர் கோவில் தலைமை குரு கோரிக்கை


ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும்! அயோத்தி ராமர் கோவில் தலைமை குரு கோரிக்கை
x

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

ஆதிபுருஷ் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு வலியுறுத்தியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள நடிகர் பிரபாஸ், செங்கோட்டையில் நடந்த தசரா விழாவில் கலந்து கொண்டு ராவண பொம்மையை அம்பு விட்டு அழித்த சம்பவம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், மறுபக்கம் அந்த படத்திற்கு எதிராக படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் கிளம்பியுள்ளன.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். ஆகவே அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கண்டித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளது.


Next Story