'உங்களுக்கு தங்கலான் பிடித்திருப்பதால்...'- 2ம் பாகம் பற்றி பேசிய விக்ரம்
தங்கலான் இரண்டாம் பாகம் குறித்த தகவலை விக்ரம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், 'தங்கலான்' வெளியீட்டிற்கு பிந்தைய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட விக்ரம் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'தங்கலான் உங்கள் அனைவருக்கும் பிடித்திருப்பதால் 2-ம் பாகம் எடுக்க விரும்புகிறோம். நாங்கள் இது குறித்து பேசி இருக்கிறோம்', என்றார்
Related Tags :
Next Story