பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு வங்காள மொழி நடிகர் தற்கொலை முயற்சி


பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு வங்காள மொழி நடிகர் தற்கொலை முயற்சி
x

வங்காள மொழி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தில் நடிகைகள் பல்லவி டே, பிதிஷா டே மஜும்தார் மற்றும் மாடலாக இருந்து நடிகையான மஞ்சுஷா நியோகி ஆகியோர் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மரணத்திற்கான காரணங்கள் பற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வங்காள மொழியில் நடித்து வரும் நடிகர் சாய்பால் பட்டாச்சா என்பவர் தெற்கு கொல்கத்தாவில் வசித்து வருகிறார். இவர் நடிப்பு தவிர்த்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதியும் வந்துள்ளார்.

வங்காள மொழியில் வெளியான புரோதோமா காதம்பினி என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர். சில நாட்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்டு உள்ளார். போதை பொருள் பழக்கத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அந்த வீடியோவில், தனது இந்த நிலைக்கு காரணம் மனைவி மற்றும் உறவினர்கள் என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். எனது கரங்களாலேயே எனது முடிவை எடுக்க செய்து விட்டார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

எனினும், பின்னர் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு சித்தரஞ்சன் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அவர் குடிபோதையில், மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு சென்றுள்ளார் என கொல்கத்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story