அருண் விஜய் படத்தில் இணைந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்


அருண் விஜய் படத்தில் இணைந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்
x

அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையில் பிக் பாஸ் பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். ஏ. எல் விஜய் இயக்கத்தில், அருண்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் மிஷன் சாப்டர் -1. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வசூலித்திருந்தது.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்த படம், மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் இன்றைய தினம் அமர்க்களமாக இடம்பெற்றுள்ளது. இதில் பிக் பாஸ் பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இத்னானி ஆகியோர் கலந்துள்ளனர். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார்.


Next Story