பதான்' பாடல் ஆபாச காட்சிகளை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை


பதான் பாடல் ஆபாச காட்சிகளை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை
x

சமூக வலைதளங்களில் இருந்து ‘பதான்’ பாடலை நீக்குமாறு உத்தரப்பிரதேச டிஜிபியிடம் குழந்தைகள் நல அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

லக்னோ

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் குழந்தைகள் நல அமைப்பு (சிடபிள்யூசி) 'பதான்' திரைப்படப் பாடலான 'பேஷாராம் ரங்' மற்றும் பிற ஆபாசமான காட்சிகளை அகற்றுமாறு போலீஸ் டிஜிபிக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. இது 'இளம் பருவத்தினரின் மனதை கெடுக்கும் என கூறி உள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புசட்டம் 2015 இன் தொடர்புடைய பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, குழந்தைகள் நலக் குழு, ஆபாசமான உள்ளடக்கங்களை தானாக முன்வந்து விசாரணை செய்ததாக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது.

இதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின. இந்த பாடல் 15 கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகியது.

அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது ஆபாசத்தின் உச்சம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story