'சோழா சோழா' - 'பொன்னியின் செல்வன்' படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது..!


சோழா சோழா - பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது..!
x

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

டீசரை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலான 'பொன்னி நதி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் அப்டேட்டுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'சோழா சோழா' என்ற பாடல் ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.



Next Story