சினிமா கேள்வி-பதில்கள்; குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள்; குருவியார்
x

சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.inகேள்வி: அரசியலில் ஜெயலலிதாவுக்கு 'புரட்சித்தலைவி' என்ற பட்டம் கொடுத்தார்கள். சினிமாவில் அவர் பெற்ற பட்டம் என்னவோ? (பி.முகமது முனீர், காஞ்சீபுரம்)

பதில்: அபார நடிப்பு திறமைக்காக 'கலைச்செல்வி' என்று அழைக்கப்பட்டார்!

**************

கேள்வி: குருவியாரே... அம்மு அபிராமி வீட்டுக்கு நான் சென்றால்...? (டி.ஆர்.சொக்கலிங்கம், காவனூர், ராமநாதபுரம்)

பதில்: 'கும்மு'னு கவனிப்பார். விருந்தோம்பலில் சிறந்தவர் அவர்!

**************

கேள்வி: 'சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்ட நாள் முதல் என் வாழ்வில் கிரகணம் பிடித்துவிட்டது', என நடிகை ராக்கி சாவந்த் புலம்பியுள்ளாரே... (மதுரா, திருச்சி)

பதில்: கிரகணமாக வந்தவர் யாரோ..!

**************


கேள்வி: ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தின் வெற்றி பற்றி? (செல்வகணபதி, மேல்மலையனூர்)

பதில்: தலைவர், 'ரெக்கார்ட் பிரேக்கர்' அல்ல, 'ரெக்கார்ட் மேக்கர்' என்று ரசிகர்கள் பேசக்கூடிய அளவு 'ஹிட்' அடித்திருக்கிறது.

**************

கேள்வி: 'மைக்' மோகன் என்ன செய்கிறார்? (ஆராதனா, கோவில்பட்டி)

பதில்: 'ஹரா' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்!

**************

கேள்வி: 'சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: 1955-ம் ஆண்டு வெளியான 'டவுன் பஸ்' என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல் அது!

**************


கேள்வி: நடிகை திரிஷா உங்களிடம் வந்து உப்பு மூட்டை தூக்க கேட்டால் என்ன செய்வீர்கள் குருவியாரே... (மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்)

பதில்: பஞ்சு மூட்டை மாதிரி அப்படியே தூக்கி பறப்போம்ல..!

**************

கேள்வி: 'மார்க்கெட்' இழந்த நடிகைகள் என்ன செய்வார்கள்? (மல்லி மாடசாமி, அறந்தாங்கி)

பதில்: தொழில் அதிபர்களை 'டார்கெட்' செய்வார்கள்!

**************

கேள்வி: குருவியாரே... நீளமான கூந்தலை கொண்டநடிகை யாரோ? (முருகையா, சேரன்மகாதேவி)

பதில்: குஷ்பு, சாய் பல்லவி, மஞ்சிமா மோகன்!

**************


கேள்வி: ராஷ்மிகா வெள்ளை மனம் கொண்டவராமே... (எம்.ராபர்ட், தூத்துக்குடி)

பதில்: அதில் என்ன சந்தேகம். பார்த்தாலே தெரிய வேண்டாமா உங்களுக்கு..!

**************

கேள்வி: '7-ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகம் வெளியாகுமா? (மாறன், வேடசந்தூர்)

பதில்: நிச்சயமாக ... அதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன!

**************

கேள்வி: பாலிவுட் நடிகைகளின் உடற்கட்டு ஒல்லியாகவே இருப்பதன் ரகசியம் என்னவோ? (மாணிக்கம், கோவை)

பதில்: திரவ உணவுகளையே அதிகம் சாப்பிடுவார்களாம். அதுதான் ரகசியம்!

**************


கேள்வி: கே.ஆர்.விஜயா - சினேகா இடையே என்ன வித்தியாசம் ? (வத்சலா ராஜகோபா, மயிலாப்பூர், சென்னை)

பதில்: கே.ஆர்.விஜயா - புன்னகை அரசி, சினேகா - சிரிப்பழகி!

**************

கேள்வி: 'நயன்தாராவிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என அவரது கணவர் விக்னேஷ் சிவனிடம், ஷாருக்கான் தமாஷாக கூறியிருக்கிறாரே... (ராஜகனி, கயத்தாறு)

பதில்: 'ஜவான்' படத்தில் தனக்கு இணையாக நயன்தாரா நடிப்பில், சண்டை காட்சியில் அசத்திவிட்டதால் அப்படி சொன்னாராம். வேறொன்றும் இல்லையாம்!

**************

கேள்வி: 'பஜனை ஆரம்பம்' படம் என்ன மாதிரியான கதையம்சம் கொண்டது? (மாணிக்கம், மயிலாடுதுறை)

பதில்: பெயரை கேட்ட உடனே பரவசமாகி விட வேண்டாம். அது சமூக கருத்துள்ள ஜாலியான படமாம்!

**************


Next Story