'சுந்தரா டிராவல்ஸ்' பட நடிகை மீது மீண்டும் போலீசில் புகார்


சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் போலீசில் புகார்
x

சென்னை, வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவரை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த முரளி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story