'ஜவான்' படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து..!


ஜவான் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து..!
x

'ஜவான்' படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 'ஜவான்' திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. சமீபத்தில் 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய், "ஜவான் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லீ மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். லவ் யூ டூ ஷாருக்கான் சார்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story