பாடகியுடன் தொடர்பா? - விளக்கம் அளித்த ஜெயம் ரவி


Contact with the singer? - Explained by Jayam Ravi
x

தன்னை பாடகியுடன் தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார்.

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமலும், தன் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கூறியிருந்தார்.

இதனையடுத்து, ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், '

'நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள்.

இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்,' என்றார்.


Next Story