அப்பா.. இது உங்களுக்காக..!" -நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி பதிவு


அப்பா.. இது உங்களுக்காக..! -நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி பதிவு
x

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் நேற்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார். கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து 'புளூ ஸ்டார்' திரைப்படம் அமேசான் பிரைம், டென்ட் கொட்டா உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களில் வெளியானது. இதனை அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நேற்று தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

இவர்களை தொடர்ந்து, பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் தந்தை பாண்டியராஜன் ஓ.டி.டி.யில் ப்ளூ ஸ்டார் படம் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

அப்பா.. இது உங்களுக்கானது..! "புளூ ஸ்டார்" படத்தில் என்னைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நான் உங்களை நேசிக்கிறேன். புளூ ஸ்டார் திரைப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story