மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே


மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே
x

மன அழுத்தத்தால் பலமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே மன அழுத்தம் பற்றி அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட நாட்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டார். இது குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''நான் நடிகையானதும் சினிமா வாழ்க்கை நன்றாகவே போனது. ஆனாலும் எனக்குள் இனம் புரியாத வேதனை இருந்தது. என் வேதனைக்கான காரணம் எனக்கே தெரியவில்லை. ஆனால் அழுகை வரும். தூங்கினால் நன்றாக இருக்கும் என நினைப்பேன். ஆனால் தூக்கம் வராது.

தற்கொலை சம்பந்தப்பட்ட எண்ணங்கள் கூட வந்தன. என் பெற்றோர் பெங்களூரில் இருந்தார்கள். அடிக்கடி என்னை அவர்கள் பார்ப்பதற்காக மும்பை வருவார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் நான் அவர்கள் முன்னால் உற்சாகமாக இருப்பது போல நடிப்பேன். எனக்குள் தெரியாத ஒரு சூனியம் ஏற்பட்டது. என் அம்மா என்னை உடனே புரிந்து கொண்டு மன அழுத்தத்தில் இருந்து நான் வெளிவருவதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டார். அதேபோல உங்கள் குடும்பத்தில், உங்கள் நண்பர்களிடையே உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே அதுபோன்ற மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் இருப்பார்கள். அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டும்" என்றார்.


Next Story