நடிகர் நகுல் மீது துணை இயக்குநர் பரபரப்பு புகார்


நடிகர் நகுல் மீது துணை இயக்குநர் பரபரப்பு புகார்
x

நடிகர் நகுல் 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை,

19 ஆம் வயதிலேயே, இயக்குனர் ஷங்கரின் திரைப்படமான 'பாய்ஸ்' படத்தில் ஐந்து புதுமுகங்களில் ஒருவராக அறிமுகம் ஆனவர் நடிகர் நகுல் ஜெயதேவ். சில ஹிட் திரைப்படங்கள், சில சுமாரான திரைப்படங்கள் என்று நகுல் தமிழ் நடிகர்களில் ஒருவராக தனது அடையாளத்தைப் பதித்துள்ளார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில், கதாநாயகனான நடிகை சுனைனாவுடன் நடித்த நகுல், 'நாக்க மூக்க' பாடல் மூலம் பெரிய புகழ் பெற்றார்.

நடிகர் நகுல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த பல படங்களில் பாடி உள்ளார். அந்நியன் திரைப்படத்தின் காதல் யானை வருகுது ரெமோ, கஜினி திரைப்படத்தின் மச்சி பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க பாடல், வல்லவன் திரைப்படத்தில் ஹூரே ஹூரே பாடல் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார் நகுல். 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருந்தன.

இயக்குநர் ஆர்.ஜி.கே இயக்கத்தில் உருவான இப்படத்தில் நகுலுடன் நடிகர்கள் ஆர்த்தனா பினு, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாஸ்கோடகமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வேலை செய்த துணை இயக்குநர் நகுல் குறித்து புகார் தெரிவித்துள்ளார். அவர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

ஒருநாள் படப்பிடிப்பில் 3 ஆணுறைகளை வாங்கிவரும்படி நடிகர் நகுல் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு வேலையிருப்பதாகாக்கூறியும் அவர் அழுத்தம் கொடுத்தார். நான் மறுக்கவே பின்னர் என்னை படப்பிடிப்பில் இருந்து தூக்கிவிட்டார். 2 வருடம் வேலை செய்ததுக்கு சம்பளமும் தரவில்லை. படத்தில் என் பெயரும் வரவில்லை. முதலில் நடிகை ஒருவர் நடிக்கவிருந்தது அவர் அட்ஜஸ்மென்ட்டுக்கு ஒத்துழைக்கமாட்டார் என்பதால் அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்றார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Next Story