'மஞ்சுமெல் பாய்ஸ்' இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்?


மஞ்சுமெல் பாய்ஸ்  இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்?
x

தனுஷ் நடிக்க உள்ள 54-வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் , 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.

இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர் .

இந்த நிலையில், தனுஷ் நடிக்க உள்ள 54-வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் - சிதம்பரம் சந்திப்பின்போதி இதுகுறித்து பேசப்பட்டது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் தான் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.


Next Story