தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'வாத்தி' திரைப்படம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



Next Story