இயக்குநர் பாரதிராஜா நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம்


இயக்குநர் பாரதிராஜா நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம்
x
தினத்தந்தி 27 Aug 2022 2:15 PM GMT (Updated: 2022-08-27T21:58:21+05:30)

இயக்குநர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை:

தமிழ் சினிமாவின் இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் திரைப்பட இயக்குநர் நலமுடன் உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாரதிராஜாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story