'மாநாடு' ல மாஸ் கிடைச்சது..!!'டான்' ல மரியாதை கிடைச்சது..!! எமோஷன் ஆன எஸ்.ஜே.சூர்யா


மாநாடு ல மாஸ் கிடைச்சது..!!டான் ல மரியாதை கிடைச்சது..!! எமோஷன் ஆன எஸ்.ஜே.சூர்யா
x

டான் படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா கூறும்போது,

"டான் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி எனக்கு மரியாதையான வெற்றியாக அமைந்துள்ளது. ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, சிறுவர்கள் குடும்பத்துடன் வந்து கட்டியனைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநாடு படத்தில் எனக்கு மாஸ் கிடைத்தது. ஆனால், டான் படத்தில் எனக்கு மரியாதை கிடைத்தது. இது உண்மையிலேயே மிகவும் சந்தோசமான விஷயம்". இவ்வாறு அவர் பேசினார்.


Next Story