நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள் - இயக்குநர் செல்வராகவன் டுவீட்


நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள் - இயக்குநர் செல்வராகவன் டுவீட்
x

நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் என இயக்குநர் செல்லவராகவன் வருத்ததுடன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குநர் செல்வராகவன், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் செல்வராகவன்.

கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் பகாசுரன் படம் வெளியானது.

இந்த படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்திருந்தார் செல்வராகவன். இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் செல்வராகவனின் நடிப்பு பாராட்டை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள செல்வராகவன், அவ்வப்போது அறிவுரை கூறுவது, தத்துவம் சொல்வது, விரக்தியான பதிவுகளை ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் செல்வராகவன், தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் என குறிப்பிட்டு அழும் ஈமோஜிகளை பதிவிட்டுள்ளார்.


Next Story