'என் டிரஸ்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம்'- நடிகர் லாரன்ஸ்


என் டிரஸ்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம்- நடிகர் லாரன்ஸ்
x

நடிகர் ராகவா லாரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு எனது டிரஸ்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடிப்பதோடு அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்து வருகிறார். ஏழை குழந்தைகளை படிக்கவும் வைக்கிறார்.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசும்போது, "சில நாட்களுக்கு முன்பு எனது டிரஸ்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய உதவிகளை செய்தேன். அப்போது எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் மற்றவர்களிடம் உதவிகளை கேட்டேன்.

இப்போது நான் கதாநாயகனாகி விட்டேன். முன்பு 2 வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்தேன். இப்போது வருடத்துக்கு 3 படங்களில் நடிக்கிறேன். நன்றாக பணம் வருகிறது.

நன்றாக பணம் வரும்போது நீ மற்றவர்களிடம் ஏன் பணம் வாங்கி உதவிகள் செய்கிறாய் நீயே செய்யலாமே என்று எனக்குள் கேள்வி எழுந்தது. அதனால் பணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை.

எனக்கு கொடுக்கிற பணத்தை உங்கள் வீட்டின் அருகில் கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு கொடுங்கள். கஷ்டப்படுகிறவர்கள் யார் என்பதை காட்டுகிறேன். அவர்களுக்கு நீங்கள் சென்று உதவி செய்யுங்கள்'' என்றார்.


Next Story