காதலரை பிரிகிறாரா பிரபல பாப் பாடகி ஷகிரா?


காதலரை பிரிகிறாரா பிரபல பாப் பாடகி ஷகிரா?
x

வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ஏமாற்றிய காதலரை பிரபல பாப் பாடகி ஷகிரா கையும் களவும் ஆக பிடித்துள்ளார்.

பொகடா,



பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதன்பின்பு இவர்களது காதல் தீவிரம் அடைந்தது.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த தம்பதிக்கு இடையே நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.

அதற்கேற்ப, பாடகி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக சென்று பிக் வசித்து வந்துள்ளார்.

இதுதவிர பிக், சக வீரரான ரிக்கி புக் மற்றும் பிற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, வேறு சில பெண்களுடன் நள்ளிரவு 2 முதல் அதிகாலை 3 மணிவரையில் ஒன்றாக வெளியே சுற்றி திரிந்துள்ளார். பார்ட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த விவரம் ஷகிராவுக்கு தெரிய வந்துள்ளது. இது பிரிவை வலுப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஷகிராவின் புதிய ஹிட்டான பாடல் ஒன்றின் வரிகளும், இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை விளக்கியுள்ளது.

அந்த பாடல் வரிகளில், உன்னால் ஏற்பட்ட காயம் எனது தோலை திறக்கவில்லை. ஆனால் அது என்னுடைய கண்களை திறந்துள்ளது. உனக்காக அழுது, அழுது அவை சிவந்து விட்டன என எழுதப்பட்டு உள்ளன.

அதனை இப்போது நீ உணருகிறாய் என்று நன்றாக தெரிகிறது. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். நீ பொய் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும் என்றும் அதில் எழுதப்பட்டு உள்ளது.

ஷகிரா தற்போது புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். டேன்சிங் வித் மைசெல்ப் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

1 More update

Next Story