சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு


சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் முதல் பாடல் வெளியீடு
x

மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது.

மாவீரன் இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பரத் சங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று வெளியாகியுள்ளது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.Next Story