முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார், கீர்த்தி சுரேஷ்
முதல் முறையாக ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்தார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த இவர், அடுத்து, 'சைரன்' என்ற படத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ், இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.
குடும்ப அம்சங்கள் நிறைந்த அதிரடி சண்டைப் படமாக, 'சைரன்' உருவாகுகிறது. ஜெயம் ரவியுடன் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். கதையுடன் ஒன்றிய ஒரு கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். சமுத்திரக்கனி, இன்னொரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
Related Tags :
Next Story