'கேம் ஆப் திரோன்ஸ்' செர்சி லெனஸ்டருக்கு 3-வது திருமணம்


கேம் ஆப் திரோன்ஸ் செர்சி லெனஸ்டருக்கு 3-வது திருமணம்
x
தினத்தந்தி 10 Oct 2022 8:01 AM IST (Updated: 10 Oct 2022 8:11 AM IST)
t-max-icont-min-icon

கேம் ஆப் திரோன்ஸ் வெப் சீரிஸ் செர்சி லெனஸ்டர் கதாபாத்திரத்தில் லினா ஹெட்டி நடித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பட்டது.

பல கோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய கதாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார்.

இதனிடையே, செர்லி லெனஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லினாவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதில் 2013ம் ஆண்டு பிரிந்தனர்.

இதனை தொடந்து 2018-ம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லினா 2-வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் 2019-ம் ஆண்டு முறிவடைந்தது.

இந்நிலையில், ஹேம் ஆப் திரோன்ஸ் செர்சி லேனஸ்டர் நடிகை லினா ஹிட்டி 3-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். நடிகர் மார்க் மென்ஜஹாவை நடிகை லினா 3-வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





1 More update

Next Story