மீண்டும் வெளியாகும் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம்


மீண்டும் வெளியாகும் கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம்
x

'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் கிறிஸ்டோபர் நோலனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படம் 'இன்டர்ஸ்டெல்லார்'. வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில் ஆனி ஹாத்வே மற்றும் மேத்யூ மெக்கோனாஹே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் உள்நாட்டில் 18.8 கோடி அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய்) உலகம் முழுவதும் 73 கோடி அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் கிறிஸ்டோபர் நோலனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோட்பாட்டு வானியல் இயற்பியல் மற்றும் அறிவியல் துல்லியத்தின் யதார்த்தமான சித்தரிப்புக்காக இந்த திரைப்படம் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டது. படத்தில் இடம்பெற்ற கருந்துளைகள், விண்வெளிப் பயணம் மற்றும் பல்வேறு கிரகங்களின் சித்தரிப்பு ஆகியவை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில் 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இந்த படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

1 More update

Next Story