மலேசியாவில் 'கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா?


மலேசியாவில் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா?
x

‘கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தனது உடலை 'ஸ்கேன்' செய்ய அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 'கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படத்தின் 2-வது சிங்கிள் விஜயின் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story