'கோட்' படத்தின் புகைப்படங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்


கோட் படத்தின் புகைப்படங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்
x

‘கோட்’ படத்தின் புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'கோட்'. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'கோட்' படத்தின் டிரைலர் 17ம் தேதி வெளியானது. இந்த டிரெய்லரில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன.

2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரெய்லர் யூடியூபில் தற்போது வரை டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. கோட் படத்தின் டிரெய்லரை 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

'கோட்' படத்தின் புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

'கோட்'. திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.


Next Story