ஜி.வி பிரகாஷ் படத்தின் பாடல் வெளியானது


ஜி.வி பிரகாஷ் படத்தின் பாடல் வெளியானது
x
தினத்தந்தி 3 April 2024 4:49 PM GMT (Updated: 4 April 2024 9:24 AM GMT)

'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோ யூ டியூப்பில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

கடந்த மார்ச் 22ம் தேதி ஜி.வி பிரகாஷ் நடிப்பில் "ரெபெல்" திரைப்படம் வெளியாகியது. அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது.

தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.இந்நிலையில் படத்தின் பாடலான 'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோவை யூ டியூப்பில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Next Story