ரசிகரின் காலை தொட்டு வணங்கிய ஹிருத்திக் ரோஷன்


ரசிகரின் காலை தொட்டு வணங்கிய ஹிருத்திக் ரோஷன்
x

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காண வந்த ரசிகரின் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் ஹிருத்திக் ரோஷன். அனைவரிடமும் நட்புறவோடு பழகக் கூடியவர். ஹிரித்திக் தற்போது இந்தியில் விக்ரம் வேதா படத்தில் நடிக்கிறார். 2017-ம் ஆண்டில் வந்த தமிழ் ஹிட் படம் விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்காக இது தயாராகிறது. விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். இந்த படம் சம்பந்தமாக மும்பையில் நடந்த ஒரு விழாவில் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்றார். எப்போதும் போலவே அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் விசில் அடித்தும் ஓவென்ற சத்தம் கிளப்பியும் ஆரவாரம் செய்தனர்.

திடீரென ஒரு ரசிகர் எதிர்பார்க்காத வகையில் மேடை மீது பாய்ந்து ஹிருத்திக் அருகே வந்து அவர் காலை தொட்டு கும்பிட்டார். உடனே ஹிருத்திக்கும் அந்த ரசிகரின் காலை தொட்டு கும்பிட்டதோடு அவரை கட்டி அணைத்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ஹிருத்திக்கை பாராட்டி வருகிறார்கள்.


Next Story