6 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கிறேன்: பிரபல நடிகை பேட்டி


6 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கிறேன்:  பிரபல நடிகை பேட்டி
x

6 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கிறேன் என விவாகரத்து செய்த பிரபல ஹாலிவுட் நடிகை கூறியுள்ளார்.வாஷிங்டன்,


ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ட்ரூ பேர்ரிமோர். சைலன்ஸ் என்ற படத்தில் நடிக்கும்போது,6 மாதங்கள் வரை பாலியல் உறவில் இருந்து விலகி இருந்தேன் என அமெரிக்க நடிகரான ஆண்ட்ரூ கார்பீல்டு கூறினார்.

இந்நிலையில், தி ட்ரூ பேர்ரிமோர் ஷோ என்ற நிகழ்ச்சியில் நடிகை பேர்ரிமோர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, கார்பீல்டு கூறிய விசயங்களை குறிப்பிட்டு பேசினார். 6 மாதங்கள் என்பது ஒன்றும் மிக நீண்ட காலம் இல்லை என கூறினார்.
நான் கூறியதில் என்ன தவறு உள்ளது? என்று அவரே கூறி கொண்டு, நானும், அதுபோலவே... உண்மையில் இருக்கிறேன் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் அளித்த விளக்கத்தில், தனது முன்னாள் கணவரான வில் கோபல்மேன்னை 2016-ம் ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், பாலியல் உறவில் ஈடுபடவில்லை என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேர்ரிமோர் கூறும்போது, சிலர் திருமணத்தில் இருந்தோ அல்லது ஓர் உறவில் இருந்தோ வெளியேறி, வருங்காலத்தில் மற்றொரு உறவில் கலந்து விடுவார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. நான் நியாயம் பேசவில்லை.
அவர்களது வாழ்க்கை பயணங்களை நான் கொண்டாடவே செய்கிறேன். ஏனெனில், சிலருக்கு அது சாத்தியப்படுகிறது. ஆனால், எனக்கு அது சரியாக வரவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

நான் பாலியல் உறவை வெறுக்கவில்லை. என் முழு வாழ்க்கையிலும் தேடியதில் இருந்து, அன்பு மற்றும் பாலியல் உறவு இரண்டும் வேறுபட்ட விசயங்கள் என கடைசியில் அறிந்து கொண்டேன். நீங்கள் வளர்ந்து, திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் வந்த பின், உங்களது வாழ்வின் மீதமுள்ள பகுதியை ஒருவருடனேயே கழிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதுண்டு. இல்லையா? ஆனால் அது நடக்காதபோது... அது எனது மனதில் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது என கூறியுள்ளார்.

எனது மகள்களுக்காகவே வாழ்வது என்ற உறுதியில் இருக்கிறேன் என்றும் பேர்ரிமோர் கூறியுள்ளார். கோபல்மேனுடனான 4 ஆண்டு திருமண வாழ்க்கையின் பலனாக, ஆலிவ் மற்றும் பிராங்கி என பேர்ரிமோருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


Next Story