'இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை' - பி.சி.ஸ்ரீராம்


இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை - பி.சி.ஸ்ரீராம்
x

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம் ‘இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் படங்கள் இயக்க மாட்டேன் என்று அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், ''என் மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொள்வேன். எனக்கு கதை முழுவதும் சொல்ல வேண்டும். கதை பிடிக்காமல் எந்த படமும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இதுவரை நான் இயக்குனராக வருவதற்கு சில முயற்சிகள் செய்தேன். ஆனால் நல்ல பலன் வரவில்லை. ஒளிப்பதிவு வேறு, சினிமாவை இயக்குவது வேறு என்பதை புரிந்து கொண்டேன். இயக்குனராக அனைத்து பிரிவுகளையும் கையாளும் திறமை எனக்கு இல்லை. அதனால் தான் நான் இயக்கிய குருதிப்புனல் உள்ளிட்ட மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை" என்றார்.


Next Story