பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் - நடிகர் விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன். பல கோடி மக்கள் படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக்கொள்ள இதுவரை வேறு எந்த கதையும் வந்ததில்லை.
இந்த பிரம்மாண்ட கதையை இப்போது படமாக இயக்கி பாதி சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்றுவிட்டால் முழு சாதனையை அடைந்துவிடுவார் இயக்குனர்.
இந்த நிலையில் வரும் 30- ம் தேதி ரிலீஸ் ஆகிறது பொன்னியின் செல்வன். ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, 40 ஆண்டுகளாக தியேட்டருக்கு வராத தனது தாயார் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க தியேட்டருக்கு வர உள்ளார் என்றும், அதேபோன்று தியேட்டருக்கே வராத வயது முதிர்ந்தவர்களும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க தியேட்டருக்கு வர உள்ளனர் என்றும், ஆகையால் அவர்களை கணிவாக கவனிக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஹரி என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த நபர் பதிவிட்ட டுவிட்டில் நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், தனியார் திரையரங்கை 'டேக்' செய்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த ரசிகருக்கு பொன்னியின் செல்வன் நடிகர் விக்ரம் பதில் அளித்துள்ளார். அந்த ரசிகரின் டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள நடிகர் விக்ரம், '
நடிகர் விக்ரம் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்கள் அன்பிற்கும், அக்கறை குறிப்பிற்கும் நன்றி ஹரி. இந்த பிரம்மாண்டமான வரலாற்றை கண்டுகளிக்க நிறைய மகன்களும், மகள்களும் தங்கள் பெருமைமிக்க தாய்கள் மற்றும் தந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வருவார்கள். படத்தை பார்க்க எனது தாயும் தியேட்டருக்கு வருவார்கள்' என பதில் அளித்தார்.