காதல் திருமணம் செய்து கொள்வேன் - நடிகர் விஷால்


காதல் திருமணம் செய்து கொள்வேன் - நடிகர் விஷால்
x

ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த நடிகர் விஷால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

நடிகர் விஷால் சென்னை மாத்தூரில் தனது மக்கள் நல இயக்கம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 10 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''மனதில் என்ன தோன்றுகிறதோ அதை சொல்வேன். காசியை புதுப்பித்துள்ள பணிகளை பார்த்து பிரதமருக்கு நன்றி சொல்ல நினைத்தேன். அதை செய்தேன். அதற்கு பிரதமர் காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி என்று பதில் அளித்தது மேலும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இதில் அரசியல் எதுவும் இல்லை. ஒரு சாதாரண குடிமகனாக காசிக்கு சென்ற அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு அதை செய்தேன். எனக்கு திருமணம் நடக்கும். அது நடக்கும்போது உங்களுக்கு தெரிய வரும். எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம்தான் நடக்கும். நடிகர் சங்கத்தில் இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி வந்து விட்டோம். இதற்கு மேல் யாரும் தடைகள் விதிக்க முடியாது. கோர்ட்டு மூலம் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நாங்கள் நடிகர் சங்க கட்டிட வேலைகளை தொடங்கி விட்டோம்'' என்றார்.


Next Story