மருத்துவமனையில் சிகிச்சை பெரும் இலியானா...! என்ன ஆச்சு...?


மருத்துவமனையில் சிகிச்சை பெரும் இலியானா...! என்ன ஆச்சு...?
x

இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானார்கள்.

அதன்பின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இலியானாவின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது புதிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

நடிகை இலியானா மருத்துவமனையில் படுத்திருப்பது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புட் பாய்சன் காரணமாக இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இலியானா தன் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

1 More update

Next Story