'பைட் கிளப்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!


பைட் கிளப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
x

'பைட் கிளப்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'இராவணமவன்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவு எழுதி, பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பைட் கிளப்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story