புதிதாக செய்தி தொலைக்காட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்?


புதிதாக செய்தி தொலைக்காட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்?
x
தினத்தந்தி 30 Aug 2023 1:24 PM IST (Updated: 30 Aug 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய், புதிதாக செய்தி தொலைக்காட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவலுக்கு, அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் தனது 68வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே மக்கள் சேவையில் கவனம் செலுத்திவரும் அவர், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

சென்னை பனையூரில் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டமும் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், யூடியூப் சேனல் மூலம் விஜய் மக்கள் இயக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் சூழலில், நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள விஜய் தரப்பு, தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

1 More update

Next Story