'ரிசார்ட்' உரிமையாளருடன் கீர்த்தி சுரேஷ் காதலா?


ரிசார்ட் உரிமையாளருடன் கீர்த்தி சுரேஷ் காதலா?
x

பள்ளி கால நண்பரை கீர்த்தி சுரேஷ் நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் அவர் கேரளாவில் சொந்தமாக ரிசார்ட் வைத்துள்ளார் என்றும் புதிய தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

தமிழில் 'இது என்ன மாயம்' படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றார்.

ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷை பற்றிய காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக பேசினர்.

பின்னர் கேரள தொழில் அதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இரு தகவலையும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் மறுத்தனர். இந்த நிலையில் தற்போது பள்ளி கால நண்பரை கீர்த்தி சுரேஷ் நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் அவர் கேரளாவில் சொந்தமாக ரிசார்ட் வைத்துள்ளார் என்றும் புதிய தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை கீர்த்தி சுரேஷ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.


Next Story