சர்ச்சையில் ஜான்வி கபூர்


சர்ச்சையில் ஜான்வி கபூர்
x

தொலைக்காட்சிக்கு ஜான்வி கபூர் கணித பாடங்கள் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்து இந்தியில் ரீமேக் ஆகும் குட்லக் ஜெர்ரி படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தொலைக்காட்சிக்கு ஜான்வி கபூர் வகுப்பு பாடங்கள் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறும்போது, ''எனக்கு கணித பாடங்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. சிலர் ஏனோ அதற்காக மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள். அது எதனால் என்று எனக்கு தெரியவில்லை. கால்குலேட்டர் வந்த பிறகு இந்த கணக்குகளால் ஏற்பட்ட தலைவலி போய் அந்த பாடம் சுலபமாகிவிட்டது. எனக்கு கணக்கு பிடிக்காது. சரித்திரம், இலக்கியங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், வரலாறு மற்றும் இலக்கிய பாடங்கள் மனிதனை மிகவும் நல்லவனாக மாற்றி அமைக்க உதவும். கணக்கு பாடங்களை படித்தால் குறுகிய எண்ணங்கள் தான் ஏற்படும்" என்றார்.

இது கணக்கு பாட பிரியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வலைத்தளத்தில் அவர்கள் ஜான்வி கபூரை கடுமையாக சாடியும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


Next Story