ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:42 AM GMT (Updated: 8 Jun 2023 12:42 AM GMT)

'இறைவன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், 'இறைவன்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


#Iraivan will surprise you with the incredible theatrical experience across 4 languages from August 25th !!!#IraivanFromAug25#Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @PassionStudios_ #HariKVedanth @eforeditor @jacki_art @Synccinema @MangoPostIndia @gopiprasannaa @Shiyamjackpic.twitter.com/8wemronajr

— Jayam Ravi (@actor_jayamravi) June 7, 2023 ">Also Read:Next Story