ஜெயராம் மகனுக்கு விரைவில் திருமணம்


ஜெயராம் மகனுக்கு விரைவில் திருமணம்
x

ஜெயராம் மகன் காளிதாஸ் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

தமிழ் மற்றும் மலையாள சினிமா பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் தான். 'மீன் குழம்பும் மண் பானையும்', 'புத்தம் புது காலை', 'ஒரு பக்க கதை' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து கவனம் ஈர்த்தார். சமீபத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். காளிதாஸ் சமீபத்தில் காதலில் விழுந்திருப்பதாக தெரிவித்தார். தனது காதலியின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது காதலியின் பெயர் தாரினி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமணத்துக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story