ஜீவன்-நட்டி இணைந்து நடிக்கும் படம்


ஜீவன்-நட்டி இணைந்து நடிக்கும் படம்
x

படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களின் கைநாட்டை பயன்படுத்தி நில மோசடி செய்யும் 2 பலே ஆசாமிகளை பற்றிய படம், ‘சிக்னேச்சர்.’

இதில் 'காக்க காக்க' புகழ் ஜீவன், 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி ஆகிய இருவரும் கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். சாமானிய மக்களோடு பழகி, அவர்களின் ரகசிய 'டேட்டா'வை திருடுபவராக ஜீவன் நடிக்கிறார். அதே 'டேட்டா'வை பயன்படுத்தி அப்பாவி மக்களை வேட்டையாடுபவராக நட்டி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடத்தும் மோசடிகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

"நாம் வைக்கும் ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கதையை கொண்டது இந்தப் படம். சாமானிய மக்களோடு பழகி ரகசிய டேட்டாவை திருடும் கேரக்டரில் ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவராக நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் மோசடிகள்தான் திரைக்கதை" என்கிறது படக்குழு.

ஜீவன், நட்டியுடன் மன்சூர் அலிகான், இளவரசு, ஹரீஸ் பெராடி, ஜார்ஜ், மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். 'பக்ரீத்' படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு, டைரக்டு செய்கிறார். திரைக்கதை: பொன்.பார்த்திபன். எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் தொடங்குகிறது. முக்கிய காட்சிகளை மும்பை மற்றும் துபாயில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

1 More update

Next Story