ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியானது...!


ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியானது...!
x

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மதுரை,

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது.

படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், டீசரில் மௌதார்கன்னுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதைக்கடந்து சென்றால் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். இருவருக்குமிடையிலான மோதல் தொடரும்போது ராகவா லாரன்ஸ் கையிலெடுக்கும் ஆயுதத்தின் ஆச்சரியத்துடன் நிறைவடைகிறது டீசர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த டீசரை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.






Next Story