ஜிகர்தண்டா-2 படத்தின் 'மாமதுர' பாடல் வெளியானது...!


ஜிகர்தண்டா-2 படத்தின் மாமதுர பாடல் வெளியானது...!
x

'ஜிகர்தண்டா-2' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான 'மாமதுர' வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'மாமதுர அன்னக்கொடி' என தொடங்கும் இந்த பாடலை தனது மகள் தீ உடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story