டிக்கெட் டூ பாரடைஸ் படத்தில் முத்த காட்சிக்கு 80 'டேக்'


டிக்கெட் டூ பாரடைஸ் படத்தில் முத்த காட்சிக்கு 80 டேக்
x

‘டிக்கெட் டூ பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சியொன்றை படமாக்கிய அனுபவங்களை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி சுவாரஸ்யமாக பகிர்ந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி. இவர் தற்போது 'டிக்கெட் டூ பாரடைஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் ஜார்ஜ் குளூனி ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து இருக்கிறார். அமெரிக்காவில் 'டிக்கெட் டூ பாரடைஸ்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஜார்ஜ் குளூனியும் ஜூலியா ராபர்ட்சும் இணைந்து பங்கேற்று வருகிறார்கள்.

அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சியொன்றை படமாக்கிய அனுபவங்களை ஜார்ஜ் குளூனி சுவாரஸ்யமாக பகிர்ந்தார். இதுகுறித்து ஜார்ஜ் குளூனி கூறும்போது, ''இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முத்த காட்சியை படமாக்க 80 டேக்குகள் எடுத்தனர். இதனை எனது மனைவிடம் சொன்னதும் அப்படியா என்று கேட்டு ஆச்சரியமானார். உடனே நான் ஆமாம். முத்த காட்சிக்காக எடுத்த 79 டேக்குகளில் சிரித்து விட்டோம். கடைசியாக 80-வது டேக்கில்தான் முத்த காட்சியில் நடித்து முடித்தேன் என்று தெரிவித்தேன்" என்றார்.

1 More update

Next Story