'என் முதல் படம் ஹிட் ஆகவில்லை அதனால்தான்...' - ஜோதிகா


என் முதல் படம் ஹிட் ஆகவில்லை அதனால்தான்... - ஜோதிகா
x

ஜோதிகா தற்போது 'ஸ்ரீகாந்த்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.

மும்பை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஜோதிகா 1998-ல் 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் 'சைத்தான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது ஜோதிகா 'ஸ்ரீகாந்த்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த பட விழாவில் ஜோதிகா பங்கேற்றார். அப்போது அவரிடம், 'ஏன் இத்தனை வருடங்கள் இந்தி சினிமாவில் நீங்கள் நடிக்கவில்லை?' என்று கேட்கப்பட்டது.

இதற்கு ஜோதிகா ,''ஒரு ஹீரோயினுக்கு முதல் படம் ஹிட் அடித்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். பாலிவுட்டில் நான் நடித்த முதல் படம் ஹிட் ஆகவில்லை.

அதேவேளை தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். இதனால், பாலிவுட்டில் இருந்தவர்களும் என்னை தென்னிந்திய பெண் என்றே நினைத்தனர்.

பாலிவுட்டில் நான் நடிக்க மாட்டேன் என்றே முடிவு செய்து விட்டார்கள். எனக்கும் இத்தனை காலம் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. அதனால்தான், இந்த இடைவெளி'', என்று பதிலளித்தார்.

1 More update

Next Story