ரசிகர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை கஜோல்


ரசிகர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை கஜோல்
x

நடிகை கஜோல் இன்று தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

மும்பை,

தமிழில் 'மின்சார கனவு' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இந்தி நடிகையான கஜோல் நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர், 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை', மற்றும் 'கபி குஷி கபி கம்' போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடித்து இருந்தார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இன்று நடிகை கஜோல் பிறந்த நாளை கொண்டுகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஜோல் தனது 50-வது பிறந்த நாளை அவரது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டி உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும், அவரது கணவர் அஜய் தேவ்கனும் தனது மனைவி கஜோலுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அதில், "உங்கள் சிரிப்பு தொற்றக்கூடியது, உங்கள் அன்பு எல்லையற்றது மற்றும் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருபவர் நீங்கள், உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவுடன் 'மஹாராக்னி' என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story