தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கமல்ஹாசன்


தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கமல்ஹாசன்
x

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் நடிகர் கமல்ஹாசனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை. இதற்காக, நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்கினர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான கமல்ஹாசனை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

அப்போது நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களிடம் வழங்கினார்.

1 More update

Next Story